சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு
ADDED :1095 days ago
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர்.
செஞ்சி அடுத்த சிங்கவரம் மலை மீதுள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவிலில் இன்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், வழிபாடும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.