உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சானூரில் பிரமோற்சவம் நவம்பர் 10ம் தேதி துவக்கம்!

திருச்சானூரில் பிரமோற்சவம் நவம்பர் 10ம் தேதி துவக்கம்!

நகரி: திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், கார்த்திகை பிரமோற்சவம், அடுத்த மாதம், 10ம் தேதி துவங்குகிறது.இதுதொடர்பாக, திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் கூறியதாவது:திருமலை கோவிலில், வெங்கடேச பெருமாளுக்கு நடத்தப்படும் பிரமோற்சவ விழா போன்று, திருச்சானூர், பத்மாவதி தாயார் கோவிலிலும், கார்த்திகை பிரமோற்சவம், சிறப்பாக நடத்தப்படும். திருச்சானூர் கோவிலில், அடுத்த மாதம், 6ம் தேதி, ஆழ்வார் திருமஞ்சனமும், 9ம் தேதி, குங்கும அர்ச்சனை மற்றும் அங்குரார்ப்பணமும் நடக்கிறது. மறுநாளான, 10ம் தேதி, கார்த்திகை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.14ம் தேதி, பத்மாவதி தாயாருக்கு கஜவாகன சேவை நடக்கிறது; 18ம் தேதி, பஞ்சமி தீர்த்த வைபவத்துடன், பிரமோற்சவ விழா நிறைவடைகிறது.இவ்வாறு சுப்பிரமணியம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !