/
கோயில்கள் செய்திகள் / தினமலர் செய்தி எதிரொலி; திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் பக்தர்களுக்கு மேற்கூரை வசதி
தினமலர் செய்தி எதிரொலி; திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் பக்தர்களுக்கு மேற்கூரை வசதி
ADDED :796 days ago
திருப்பரங்குன்றம்; தினமலர் செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ரூ 18 லட்சத்தில் பக்தர்கள் வசதிக்காக மேற்கூரை அமைக்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான சரவணப் பொய்கை கரையில் அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் சிறப்பு வேள்வி நடத்தி வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் வெயில் மற்றும் மழையில் அவதிப்படும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தினமலர் செய்தி வெளியிடப்பட்டது. செய்தியின் எதிரொலியாக கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் சரவணப் பொய்கை கரைப்பகுதியில் மேற்கூரை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.