அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள்; பல மணி காத்திருந்து தரிசனம்
ADDED :742 days ago
திருவண்ணாமலை : தொடர் விடுமுறை காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவில் நான்காம் பிரகாரத்தில் பல மணி நேரமாக ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் கிளகோபுரம் நுழைவாயில் நின்று கொண்டு அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமக்கு வேண்டியவர்கள் மட்டும் தரிசனத்திற்கு உள்ளே அனுப்பு அனுப்பினர். இதனால் காத்திருந்த பக்தர்கள் கோபம் அடைந்தனர். கோவில் வளாக கலையரங்கத்தில் திருப்பதி சாஸ்ரா ஆர்ட்ஸ் நேஷ்னல் அகாடமி சார்பில், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கான, ஒரிசா, தமிழ்நாடு உள்பட் மாநிலங்களை சேர்ந்த பரதநாட்டிய மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.