உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அடைக்கலம் காத்த அம்மன் கோயில் முளைக்கொட்டு விழா

அடைக்கலம் காத்த அம்மன் கோயில் முளைக்கொட்டு விழா

கமுதி: கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் அடைக்கலம் காத்த அம்மன் கோயில் 47ம் ஆண்டு முளைக்கட்டு விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர்​. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில் முன்பு கிராமமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அடைக்கலம் காத்த அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. முளைக்கொட்டு திண்ணையில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் முளைப்பாரி தூக்கி ஊர்வலமாக கொண்டு சென்று ஊருணியில் கரைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பசும்பொன் கிராமமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !