சந்தன காப்பு அலங்காரத்தில் கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள்
ADDED :764 days ago
தஞ்சாவூர்; கண்டியூரில் உள்ள ஹரசாப விமோசன பெருமாள் கோவிலில், புரட்டாசி கடைசி சனிக்கிழமை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.