/
கோயில்கள் செய்திகள் / அயோத்தியில் சாரதா நவராத்திரி விழா; யாகசாலை பூஜை துவக்கிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
அயோத்தியில் சாரதா நவராத்திரி விழா; யாகசாலை பூஜை துவக்கிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
ADDED :836 days ago
அயோத்தி; அயோத்தியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் சாரதா நவராத்திரி விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
அயோத்தியில் உள்ள ஸ்ரீசங்கர மடத்தில் காஞ்சி விஜயேந்திர சுவாமிகள் நவராத்திரி மற்றும் விஜயதசமி வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறார். சங்கர மடத்தில் அக்.,11முதல் நவ. 1 வரை தங்கி நவராத்திரி, விஜயதசமி பூஜைகளை மேற்கொள்கிறார். நவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜைகளை விஜயேந்திர சுவாமிகள் துவக்கி வைத்தார். முன்னதாக அவர், அயோத்தியில் உள்ள புனித சரயு நதியில் ஸ்நானம் செய்து வழிபட்டார். தொடர்ந்து சங்கர மடத்தில் நடைபெற்ற சாரதா நவராத்திரி விழாவில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நவம்பர் 1ம் தேதி வரை சாரதா நவராத்திரி உற்சவம் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் அயோத்தியில் நடைபெறும்.