உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திரகிரகணம்; அக்., 28ல் அழகர்கோவில் கள்ளழகர் கோயில் நடையடைப்பு

சந்திரகிரகணம்; அக்., 28ல் அழகர்கோவில் கள்ளழகர் கோயில் நடையடைப்பு

மதுரை; சந்திரகிரகணத்தை முன்னிட்டு அக்., 28 மாலை 6 மணி முதல் அழகர்கோவில் கள்ளழகர் கோயில், அதன் உபகோயில்களில் நடை அடைக்கப்படுகிறது.

அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் அக்., 28 மாலை 6 மணி முதல் சந்திரகிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்படும். இக்கோயில் தவிர,அழகர்மலை ராக்காயி அம்மன் கோயில் மற்றும் உபகோயில்களான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில்களும் அனைத்து பூஜைகளும் முடிந்து நடை சாத்தப்படும். அக்., 29 வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !