உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானமூர்த்தீஸ்வரர் கோயிலில் தசரா விழா; வேடமணிந்து வந்த பக்தர்கள்

ஞானமூர்த்தீஸ்வரர் கோயிலில் தசரா விழா; வேடமணிந்து வந்த பக்தர்கள்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே பொசுக்குடியில் உள்ள ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. குலசை ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோயிலில் கும்பம் எடுத்து வந்து பொசுக்குடி அம்மன் கோயிலில் இருந்து கும்பவீதி உலா நடந்தது. பின்பு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது. வீரமணிகண்டன் தசரா குழு சார்பில் மாலை அணிவித்த பக்தர்கள் மயான காளி,சிவன் பார்வதி,கருப்பன்,முருகன், பிள்ளையார், அம்மன்,குறவர் ,குறத்தி, செவிலியர்,போலுஸ் உட்பட ஏராளமான வேடமணிந்து அம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக சென்றனர். கிராமத்தின் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. பின்பு ஆதனக்குறிச்சி,அலங்கானூர் கிராமத்திற்கு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். ஏற்பாடுகளை பொசுக்குடி வீரமணிகண்டன் தசரா குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !