/
கோயில்கள் செய்திகள் / அயோத்தி சங்கர மடத்தில் விஜயதசமி விழா; மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி விஜயேந்திர சுவாமிகள் ஆசி
அயோத்தி சங்கர மடத்தில் விஜயதசமி விழா; மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி விஜயேந்திர சுவாமிகள் ஆசி
ADDED :762 days ago
அயோத்தி; அயோத்தியில் உள்ள ஸ்ரீசங்கர மடத்தில் காஞ்சி விஜயேந்திர சுவாமிகள் நவராத்திரி மற்றும் விஜயதசமி வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறார். சங்கர மடத்தில் அக்.,11முதல் நவ. 1 வரை தங்கி நவராத்திரி, விஜயதசமி பூஜைகளை மேற்கொள்கிறார். நவராத்திரி விழாவை முன்னிட்டு, விஜயதசமியான இன்று யாகசாலை பூஜை, ஸ்ரீவித்யா ஹவனம் மற்றும் ரிக்வேத சம்ஹிதா ஹவனத்தில் சந்திரமௌலீஷ்வர பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாசினி, கன்யா பூஜைகள் நடந்தன. பூஜைகளை விஜயேந்திர சுவாமிகள் நடத்தி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற விஜயதசமி பூர்த்தி விழாவில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சான்றிதழ்கள் பெற்றவர்கள் விஜயேந்திர சுவாமிகளிடம் ஆசி பெற்று சென்றனர். நவம்பர் 1ம் தேதி வரை சாரதா நவராத்திரி உற்சவம் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் அயோத்தியில் நடைபெறும்.