அருப்புக்கோட்டை கோயில்களில் அன்னாபிஷேகம்
ADDED :715 days ago
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.
அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அமுதலிங்கேஸ்வரருக்கு அன்னம் மற்றும் காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. காலை 7 மணி முதல் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் நடந்தது. அமுதலிங்கேஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உட்பட 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அன்னம் மற்றும் காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜன் துவக்கி வைத்தார்