உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி பெருமாள் கோயிலில் கருடசேவை

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி பெருமாள் கோயிலில் கருடசேவை

ஸ்ரீவைகுண்டம்; ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி பெருமாள் கோயிலில் அவதார திருநட்சத்திர சிறப்பு கருடசேவை நடந்தது.  ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி பெருமாள் கோயிலில் பெருமாளின்அவதார திருநட்சத்திர திருநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு கருடசேவை நடந்தது. காலை8.30 மணிக்கு மூலவருக்கு பால் திருமஞ்சனத்துடன், 9.30மணிக்கு உற்சவர் கள்ளபிரான் தாயார்களுடன் சயனக்குறட்டிற்கு எழுந்தருளினார். அங்கு, அவருக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரத்துடன்பகல் 11 மணிக்கு தீபாராதனையும், 11.30 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த சாத்து முறையும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை சந்திர கிரகணகம் காரணமாக முன்னதாகவே கருடசேவைவ ழிபாடுகள் நடைபெற்றது. மாலை 4மணிக்கு சாயரட்சையும், 5.25மணிக்கு சுவாமி கள்ளபிரான்கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில், கோயில் நிர்வாகஅதிகாரி கோவலமணிகண்டன், ஆய்வாளர் நம்பி, அர்ச்சகர்கள் ரமேஷ், வாசு, நாராயணன், ராமானுஜம், சீனு, ஸ்தலத்தார்கள் ராஜப்பாவெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !