உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணாமலையார் விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா

அண்ணாமலையார் விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா

மானாமதுரை; மானாமதுரை அண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலையார் விநாயகர் கோவிலில் நடைபெற்ற வருஷாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மானாமதுரை அண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலையார் விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் முன்பாக ஹோமங்கள் வளர்க்கப்பட்டு கலசங்களில் புனித நீர் வைத்து யாகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து பூர்ணாஹூதி முடிந்து விநாயகருக்கும், நாக நாதருக்கும்,நாகம்மனுக்கும் 11 வகையான பொருட்களால் கோவில் அர்ச்சகர் நாகமணி அபிஷேக,ஆராதனைகள் நடத்தி சிறப்பு அலங்காரங்களை செய்தார். இதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. அன்னதானம் நடந்தது.விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.,நாகராஜன்,நகராட்சி கவுன்சிலர்கள் இந்துமதி திருமுருகன், அமுதா கணேசன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அண்ணாமலை நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் முனீஸ்வரன்,பொருளாளர் பிச்சைமணி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !