/
கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்க வாசல் டிச., 23ல் திறப்பு; ஆன்லைனில் டிக்கெட்
திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்க வாசல் டிச., 23ல் திறப்பு; ஆன்லைனில் டிக்கெட்
ADDED :738 days ago
திருப்பதி; ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிச., 23ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
இது குறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி கூறியதாவது: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, டிச., 23ம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. ஜன., 1ம் தேதி வரை திறந்திருக்கும். இதற்காக, 2 லட்சம் சிறப்பு தரிசன டிக்கெட்டும், 5 லட்சம் சர்வ தரிசன டிக்கெட்டும் வரும் 10ம் தேதி ஆன்லைனில் வெளியாகிறது. என்று தெரிவித்தார்.