உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில், கள்ளழகர் கோயிலில் கார்த்திகை தீப உற்ஸவம்; நவ.26ல் கோலாகலம்

அழகர்கோவில், கள்ளழகர் கோயிலில் கார்த்திகை தீப உற்ஸவம்; நவ.26ல் கோலாகலம்

அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயில் கார்த்திகை தீப உற்ஸவம் நவ.,26 மாலை 6:15 மணிக்கு மேல் தொடங்கி இரவு 7:00 மணிக்குள் நடக்கிறது. பெருமாள், சேத்திரபாலகர், கருடர், சக்கரத்தாழ்வார், நரசிம்மர், ஆண்டாள், சரஸ்வதி சன்னதிகளில் நெய் விளக்கு ஏற்றப்பட்டு தெற்கு படியேற்றத்தின் வழியாக சுந்தரராஜ பெருமாள் எழுந்தருள்வார். ஆழ்வார்கள் சன்னதியில் தீர்த்தமாடி சுவாமியை குடவரை வழியாக உறியடி மண்டபத்திற்கு கொண்டு வருவார்கள். அகல் தீபத்தில் சொக்கப்பனை கொளுத்திய பின் பெருமாள் தீப உற்ஸவம் நடைபெறும். அழகர்மலையின் உச்சியில் அமைந்துள்ள வெள்ளிமலையாண்டி கோயில் கோம்பை கொப்பரையில் 200 லிட்டர் நெய் ஊற்றி மாலை 6:15 மணிக்கு மேல் இரவு 7:00 மணிக்குள் தீபம் ஏற்றப்படும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !