உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

கொடைரோடு: அம்மையநாயக்கனூர் கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம் 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. முன்னதாக தேனி லட்சுமி நாட்டியாலயா மாணவிகளின் பரதநாட்டியம் நடந்தது. அ.தி.மு.க. நகர செயலாளர் தண்டபாணி, தி.மு.க. நகர செயலாளர் விஜயகுமார், மாரியம்மன் கோவில் விழா குழு தலைவர் தங்கபாண்டியன், பிள்ளைமார் உறவின் முறையினர், ஆழ்வார் சன்னதி உபயதாரர்கள் நவகிரக சன்னதி உபயதாரர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழா குழு செயலாளர் அழகப்பன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !