உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோயில் சுற்றுச்சுவர் மழைக்கு சரிந்து விழுந்தது

பெருமாள் கோயில் சுற்றுச்சுவர் மழைக்கு சரிந்து விழுந்தது

தொண்டி: தொண்டியில் பலத்த மழையால் உந்திபூத்த பெருமாள் கோயில் சுற்றுச்சுவர் சேதமடைந்ததால் பக்தர்கள் கவலையடைந்தனர். 


தொண்டியில் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான உந்திபூத்த பெருமாள் கோயில் உள்ளது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் இங்கு அருள்பாலிக்கிறார். ராமானுஜர் வழிபட்ட தலம். இங்கு கருடர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ஆதிசேஷன் சன்னதிகள் உள்ளன. புரட்டாசி சனி மற்றும் ஏகாதசி விழாவின் போது ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். இக்கோயில் சுற்றுச்சுவர் செங்கல், மண்ணால் கட்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு கோயில் வடக்கு பகுதியில் சுவர் சரிந்து விழுந்தது. 


பக்தர்கள் கூறுகையில், பழமை வாய்ந்த இக்கோயிலில் உள்ள பெருமாளை வணங்கினால் நோய்கள் நீங்கும். இக்கோயில் சுற்றுச்சுவர் மண்ணால் கட்டப்பட்டுள்ளது. மழையால் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. மற்ற பகுதிகள் ஆபத்தான நிலையில் உள்ளது. தெற்குப்பகுதியில் சுவர் மிகவும் பலமிழந்துள்ளது. கோயிலுக்கு வருமானம் தரக்கூடிய நிலங்கள் மற்றும் கடைகள் இருந்த போதும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. சுவரின் மற்ற பகுதிகள் சேதமடைவதற்கு முன்பு சீரமைக்க ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !