/
கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் அம்பாளுக்கு தீர்த்தவாரி; ரிஷப வாகனத்தில் சுவாமி காட்சி
நெல்லையப்பர் கோயிலில் அம்பாளுக்கு தீர்த்தவாரி; ரிஷப வாகனத்தில் சுவாமி காட்சி
ADDED :805 days ago
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் அம்பாளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த அக்.29ம் தேதி துவங்கியது. 10ம் நாளான நேற்று அம்பாள் தீர்த்தவாரி உற்சவத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து பொற்றாமரைகுளத்தில் அம்பாளுக்கு தீர்த்தவாரி நடந்தது. இரவு 7மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. நள்ளிரவு 1 மணிக்கு அம்பாள் தவக்கோலத்தில் தங்க சப்பரத்தில் கம்பைநதிக்கு எழுந்தருளல் நடந்தது. இன்று காலை 11மணிக்கு அம்பாளுக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.