கேரள பத்மநாப சுவாமி கோவில் பாதுகாப்பிற்கு 23.61 கோடி!
ADDED :4795 days ago
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலி்ன் புதையலை பாதுகாக்கும் செலவிற்கு 23.61 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவிலின் பாதுகாப்பு பணிக்காக உலகத்தரம் வாய்ந்த கருவிகளை மூன்று கட்டங்களாக கொள்முதல் செய்வதற்கு கேரள அரசு நிறுவனமான கெல்ட்ரான் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 9.80 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை ஒப்பதல் அளித்துள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார். கோவிலின் பொக்கிஷங்களை பாதுகாக்கும் பணியை மேற்கொள்வதற்காக இரு தனிக்குழுக்களை சுப்ரீம் கோர்ட் நியமித்து உத்தரவிட்டுள்ளது.