உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி கோவிலில் இருந்து திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு சீர்வரிசை

திருப்பதி கோவிலில் இருந்து திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு சீர்வரிசை

திருப்பதி: திருமலை திருப்பதி கோவிலில் இருந்து திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு தங்க ஆபரணங்கள் அடங்கிய சீர்வரிசை அனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 18ம் தேதி வரை நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இன்று கஜ வாகன சேவை நடைபெறுகிறது. 18ம் தேதி பஞ்சமி தீர்த்த விழா நடைபெற உள்ளது. விழாவில் இன்று திருப்பதி கோவிலில் இருந்து திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு தங்க ஆபரணங்கள் அடங்கிய சீர்வரிசை அனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !