திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; துர்க்கை அம்மன் உற்சவம்
ADDED :802 days ago
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா துவங்குவதை முன்னிட்டு, துர்க்கை அம்மன் உற்சவம் நடைபெற்றது.
கார்த்திகை தீபத் திருவிழாவில் நேற்று இரவு முதல் உற்சவமாக நகர காவல் தெய்வமான கிரிவலப் பாதையில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காமதேனு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி துர்க்கை அம்மன் மாடவீதி உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். உற்சவத்தை முன்னிட்டு துர்க்கை அம்மன் கோவில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.