திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரருக்கு 12 திருக்குடைகள்; மகா தீபத்திற்கு 4500 கிலோ நெய் தயார்
திருவண்ணாமலை; அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னை அருணாச்சலம் ஆன்மீக சேவை சங்கம் சார்பில் மூன்று லட்ச ரூபாய் மதிப்பில் 12 சுவாமி திருக்குடைகளை மாட வீதி உலா வந்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். கார்த்திகை தீபத் திருவிழா பத்தாவது நாளான வரும் 26ம் தேதி, 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்திற்கு தேவையான 4500 கிலோ நெய் தயார் நிலையில் உள்ளது. அருணாச்சலம் ஆன்மீக சேவை சங்கம் சார்பில் நடந்த திருக்குடை ஊர்வலத்தில் விநாயகர், சிவன், பார்வதி, முருகன், வேடமடைந்து நடனமாடி அவர்களை வெகுவாக அனைவரையும் கவர்ந்தது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு, முன்னேற்பாடுகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.