வராகநதிக்கரையில் சரணகோஷத்துடன் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்
ADDED :790 days ago
பெரியகுளம்: பெரியகுளம் வராக நதிக்கரையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சரணகோஷத்துடன் மாலை அணிவித்து விரதம் துவங்கினர். கார்த்திகை மாதம் 1ம் தேதியை முன்னிட்டு, பெரியகுளம் வராகநதியில் குளித்து, கரையில் ஐஸ்வர்ய விநாயகரை வணங்கி நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர். ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வது அதிகரித்து வருகிறது. கம்பம் ரோடு பாலசாஸ்தா கோயிலில் மண்டல பூஜை துவக்க நாளை முன்னிட்டு ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பால், தயிர், பன்னீர், இளநீர் உட்பட 16 வகையான திரவியங்களில் அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அர்ச்சகர் பிரசன்னா பூஜைகள் செய்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.