உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சகஸ்ர தீபம்; தீப ஒளியில் பிரகாசித்தது சன்னிதி

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சகஸ்ர தீபம்; தீப ஒளியில் பிரகாசித்தது சன்னிதி

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சகஸ்ரதீப வைபவம் நடைபெற்றது.

வைணவக் கோயில்களில் கார்த்திகை மாதத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றி வழிபடுதல் மிகுந்த நற்பலன்களைக் கொடுக்கும். இவ்வகையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்  ஆண்டுதோறும் 3 நாட்களுக்கு ஸஹஸ்ரதீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடக்கிறது. அதே போல இந்த ஆண்டும் ஸஹஸ்ரதீப வைபவம் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாளில் ஸ்ரீரங்கம் கோயில் ரெங்கநாயகி தாயார் சன்னதியிலும், 2ம் நாளில் சக்ரத்தாழ்வார் சன்னதியிலும், நேற்று மாலை பெரிய சன்னதி எனப்படும் ரங்கநாதர் சன்னதியின் மூன்றாம் பிரகாரத்திலும் சகஸ்ர தீபம் ஏற்றப்பட்டது.  ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், பட்டாசாரியார்களும் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !