புஷ்பவனேஸ்வரர் கோயிலில் கார்த்திகை திருநாள் கொண்டாட்டம்
ADDED :692 days ago
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. கார்த்திகை திருநாளை முன்னிட்டு கோயிலில் அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. கோயில் வளாகத்தில் பனி லிங்கம், திருவண்ணாமலை கோயில் கோபுரம் கிரிவல பாதை மற்றும் நடராஜர் வடிவில் 12 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கார்த்திகை திருநாள் கொண்டாடப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் வேலுச்சாமி மற்றும் அருள்நெறி தெய்வீக பேரவை மாணவர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.