மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4751 days ago
தர்மபுரி: தர்மபுரி, கருவூல காலனி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு, இராண்டாம் கால யாக பூஜை, நடந்தது. காலை, 8.30 மணிக்கு, மூலவர் கோபுரம், மாரியம்மன், சிங்க வாகனம், பலிபீடம் ஆகியவற்றுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தீயணைப்புத் துறை அலுவலக வளாகத்தில் உள்ள சிவன் கோவிலில் இருந்து, மாரியம்மன் கோவிலுக்கு பால் குடம் எடுத்து வரப்பட்டது. மாலை, 6 மணிக்கு, திருவீதி உலா நடந்தது.