திருப்பரங்குன்றம் ஐயப்பனுக்கு 1008 போற்றி அர்ச்சனை
ADDED :666 days ago
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கன்னி பூஜையை முன்னிட்டு 1008 போற்றி அர்ச்னைகள் நடந்தது. கோயிலில் நூற்றுக்கும் அதிகமான கன்னி சுவாமிகள் பூஜை நடத்தினர். மூலவர்கள் விநாயகர், விஷ்ணு, சொக்கநாதர், மீனாட்சி அம்மன், வள்ளி, தெய்வானை சமேத முருகன், ஆஞ்சநேயர், கருப்பசாமி, துர்கா கன்னிகா பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜை முடிந்து அலங்காரமானது. பஜனை முடிந்து மூலவர் ஐயப்ப சுவாமிக்கு மலர் அலங்காரமாகி 1008 போற்றி அர்ச்சனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.