உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி காசி விஸ்வநாதர் கோவிலில் மகாயாகம்

செஞ்சி காசி விஸ்வநாதர் கோவிலில் மகாயாகம்

செஞ்சி; செஞ்சி காசிவிஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடப்பதற்காக சிறப்பு ஹோமம் நடந்தது.

செஞ்சி சிறுகடம்பூர் காசி விஸ்வநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடக்க வேண்டி கடந்த மாதம் 21ம் தேதி 77 கிலோ விபூதி அபிஷேகத்தில் துவங்கி தினமும் 77 கிலோ அளவில் 21 நாட்களுக்கு பல்வேறு அபிஷேகம் செய்து வந்தனர். இதன் நிறைவாக நேற்று மகா யாகம் நடத்தினர். இதை முன்னிட்டு காலை 8 மணிக்கு காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். 10 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்து 100க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்ற மகா யாகம் நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட தம்பதிகள் பங்கேற்று கலச பூஜை செய்து, வேள்வியில் கலந்து கொண்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !