உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு மானாமதுரை கோயில்களில் இருந்து புனித நீர்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு மானாமதுரை கோயில்களில் இருந்து புனித நீர்

மானாமதுரை; மானாமதுரை பகுதியில் உள்ள கோயில்களில் இருந்து அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக புனித நீர் அனுப்பி வைக்கப்பட்டது.

மானாமதுரை ஒன்றிய,நகர பா.ஜ.சார்பில் ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் நகர தலைவர் நமகோடி (எ)முனியசாமி ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள்,தொண்டர்கள் மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர், சோனையா, அங்காள பரமேஸ்வரி அம்மன், அலங்கார குளம் சோனையா சுவாமி உள்ளிட்ட கோயில்களில் புனித நீர் அடங்கிய தீர்த்த குடங்களை அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக அனுப்பி வைத்தனர் இதில் மானாமதுரை ஒன்றிய,நகர பா.ஜ., நிர்வாகிகள்,தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !