/
கோயில்கள் செய்திகள் / அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வெள்ளாற்றிலிருந்து புனிதநீர் அனுப்பிவைப்பு
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வெள்ளாற்றிலிருந்து புனிதநீர் அனுப்பிவைப்பு
ADDED :666 days ago
திட்டக்குடி; அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக பாரதியஜனதா கட்சியினர், வெள்ளாற்றிலிருந்து புனிதநீரை எடுத்து அனுப்பிவைத்தனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 21ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளிலிருந்து புனிதநீர் கொண்டு செல்லப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக வரலாற்றில் நீவா நதி என்றழைக்கப்படும் வெள்ளாற்றிலிருந்து திட்டக்குடி நகர பாரதியஜனதா சார்பில் புனிதநீர் எடுத்து அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. பாரதியஜனதா திட்டக்குடி நகர தலைவர் பூமிநாதன் தலைமையில், மாவட்டசெயலாளர் சுரேஷ், ஓ.பி.சி.அணி மாவட்டதலைவர் கஜேந்திரசிங், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் வேல்முருகன், கொண்டாங்கி பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.