கார்த்திகை கடைசி வெள்ளி; கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :852 days ago
கோவை; ஆர். எஸ். புரம் உழவர் சந்தை எதிரே உள்ள ஸ்ரீ வர சக்தி விநாயகர் கோவிலில் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள வள்ளி தேவ சேனா சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.