உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டியூர் அரசாபவிமோசன பெருமாள் கோவிலில் செர்க்கவாசல் திறப்பு

கண்டியூர் அரசாபவிமோசன பெருமாள் கோவிலில் செர்க்கவாசல் திறப்பு

தஞ்சாவூர்; திருவையாறு அருகே கண்டியூர் அரசாபவிமோசன பெருமாள் கோவிலில் வெகு விமர்சையாக செர்க்கவாசல் திறப்பு நடந்தது.
 
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூர் 108 திவ்ய தேசத்தில் 15 வது ஸ்தலம் அரசாபவிமோசன பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செர்க்கவாசல் திறப்பு வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. கமலவல்லிதாயார் சமேத அரசாபவிமோசனப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் பணிபோர்வையுடன் மற்றும் வேதங்கள் மேளதாள முழங்க ஆராதனையோடு பரமபதவாசல் வழியாக எழுந்தருளினார் பக்தர்ள்  கோவிந்தா கோவிந்த என முழங்க வெளியே வந்தார்.. அதனைதொடர்ந்து உள் பிரகாரங்கள் மேளதாள கச்சேரியுடன் வலம் வந்தார். இதில் இந்து அறநிலையதுறை செயல் அலுவலர் பிருந்ததேவி, பட்டாச்சாரியர்கள், எழுத்தர்கள் பஞ்சநாதன்,செந்தில்குமார், மற்றும் கோவில் பணியாளர்கள் என உள்ளிட்ட பக்தர்கள் ஏராளமானோர்  கலந்துகொண்டு  சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீதேவி பூதேவியுடன் அரசாப விமோசனப் பெருமாள் கமலவல்லி தாயார் சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !