ஸ்ரீரங்கம் இராப்பத்து ஏழாம் நாள்; நம்பெருமாள் திருக்கைத்தல சேவை
ADDED :658 days ago
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழா இராப்பத்து ஏழாம் நாளில், பரமபத வாசல் வழியாக நம்பெருமாள் சிறப்பு புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, திருக்கைத்தல சேவை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். ஆயிரம் கால் திருமாமணி மண்டபத்தில் பச்சை பட்டு அணிந்து நம்பெருமாள் சேவை சாதித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.