/
கோயில்கள் செய்திகள் / புத்தாண்டு வழிபாடு; கோயில்களில் குவிந்த பக்தர்கள்.. திருச்செந்தூரில் அலைகடலென திரண்டனர்
புத்தாண்டு வழிபாடு; கோயில்களில் குவிந்த பக்தர்கள்.. திருச்செந்தூரில் அலைகடலென திரண்டனர்
ADDED :710 days ago
மதுரை; 2023ம் வருடம் முடிந்து 2024 புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டு பிறந்ததை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் கடலிலும் நாழிக்கிணற்றிலும் புனித நீராடி நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.