சதுரகிரியில் வழிபாடு; நாளை ஜன.9 முதல் 11வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை
                              ADDED :662 days ago 
                            
                          
                          வத்திராயிருப்பு; மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனத்துறை அறிவித்துள்ளது. இக்கோயிலில் ஜன.9ல் பிரதோஷம் 11ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஜன.9 முதல் 12ந்தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.