உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர், பாபாஜி கோயிலில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தரிசனம்

சிதம்பரம் நடராஜர், பாபாஜி கோயிலில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தரிசனம்

புதுச்சேரி; புதுச்சேரி வந்த குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று, புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம், சிதம்பரம் நடராஜர், மகா அவதார் பாபாஜி கோயிலில் பிரார்த்தனை செய்தார்.

குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் புதுச்சேரி மற்றும் கடலூருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தர் அன்னைக்கு அஞ்சலி செலுத்தி வழிபட்டார். தொடர்ந்து, சிதம்பரத்தில் உள்ள மகா அவதார் பாபாஜி கோயிலில் தரிசனம் செய்தார். சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் வந்த குடியரசுத் துணைத் தலைவர், நாட்டு மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்தார். நடராஜப் பெருமான் பாரதத்திற்கு அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ தொடர்ந்து அருள் புரியட்டும் என நெகிழ்ச்சியுடன் குறிபிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !