அயோத்தி ராமர் கோவிலில் முஸ்லிம்கள் வழிபாடு; வலைதளத்தில் வைரல்
ADDED :645 days ago
அயோத்தி; உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை பார்ப்பதற்காக, நாடு முழுதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தினமும் வருகின்றனர். இந்நிலையில், அயோத்தி ராமர் கோவிலில் முஸ்லிம்கள் வரிசையில் நின்று ராமரை வழிபட்டு சென்றனர். அயோத்தி ராமர் கோவிலுக்கு லக்னோவை சேர்ந்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பக்தர்கள், தினமும் 25 கிலோ மீட்டர் பயணம் செய்து, ஐந்து நாட்களில் அயோத்தியை அடைந்தனர். அவர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமரை வழிபட்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன.