சிவலோக நாதசுவாமி கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
ADDED :642 days ago
காரைக்கால்; காரைக்கால் சிவலோக நாதசுவாமி கோவிலில் தைவெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. காரைக்கால் மாவட்ட- தலத்தெரு சிவகாமி அம்மன் சமேத சிவலோக நாதசுவாமி தேவஸ்தானத்தில் தை மாத மூன்றாவது வெள்ளிகிழமை முன்னிட்டு இன்று துர்க்கை அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், தேன் உள்ளிட்ட பலவகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனர்.