/
கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காக திருப்பதியில் அயோத்தியா காண்டம் அகண்ட பாராயணம்; 11ல் நடக்கிறது
உலக நன்மைக்காக திருப்பதியில் அயோத்தியா காண்டம் அகண்ட பாராயணம்; 11ல் நடக்கிறது
ADDED :618 days ago
திருப்பதி; திருமலையில் உள்ள நாதநீராசனம் மேடையில் உலக நன்மைக்காக அயோத்தியா காண்ட அகண்ட பாராயணத்தின் 7 வது அத்தியாயம் வரும் பிப்., 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அயோத்யாகாண்டத்தின் 22 முதல் 25 சர்கா வரை நான்கு சர்காக்களில் மொத்தம் 155 ஸ்லோகங்கள், யோகவாசிஷ்டம் மற்றும் தன்வந்திரி மஹாமந்திரத்தின் 25 ஸ்லோகங்கள் என மொத்தம் 180 ஸ்லோகங்கள் சொல்லப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் எஸ்.வி.வேதா விஞ்ஞான பீடம், எஸ்.வி.வேதா பல்கலைக்கழகம், TTD வேத அறிஞர்கள், TTD சாம்பவன அறிஞர்கள், ஸ்ரீ அன்னமாச்சார்யா திட்டம், தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக அறிஞர்கள் பங்கேற்கின்றனர். SVBC நிகழ்ச்சியை காலை 7 மணி முதல் 9 மணி வரை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.