உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவ விழா

மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவ விழா

போத்தனூர்; வெள்ளலூர் இடையர்பாளையத்தில் உள்ள மாரியம்மன், மாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் முன்னிட்டு, சக்தி கரக ஊர்வலம் நடந்தது. விழா கடந்த, 30ல் சாமி சாட்டுதலுடன் துவங்கியது. 6ம் தேதி புண்யார்ச்சனை, காப்பு கட்டுதல், கம்பம் நடுதல் நடந்தன. 9ம் தேதி திருவிளக்கு பூஜை, 12ம் தேதி கொடியேற்றம் நடந்தன. இன்று காலை அழகு நாச்சியம்மன் கோவிலிலிருந்து சக்தி கரகம் ஊர்வலம் துவங்கி, மதியம் கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணமும், அபிஷேக அலங்கார பூஜையும், அன்னதானமும் நடந்தன. மாவிளக்கு வழிபாடு நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்மனை தரிசித்து சென்றனர், நாளை மதியம் மஞ்சள் நீராடல், அம்மன் திருவீதி உலாவும், இரவு ஊஞ்சல் தாலாட்டும் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !