மாசி கிருத்திகை; வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :634 days ago
திருப்பூர், வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திருப்பூர், வாலிபாளையத்தில், பழமையான வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. மூலவராக கல்யாண கோலத்தில் சுப்ரமணியர், வடக்கு பார்த்து எழுந்தருளியுள்ளார். தவிர, விநாயகர், பெருமாள், சிவன் சன்னதிகள், தனித்தனியே உள்ளன. பழமையான இக்கோவிலில், இன்று மாசி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.