திருவொற்றியூர் தியாகராஜர் பிரம்மோற்சவம் விழா; யானை வாகனத்தில் சுவாமி உலா
ADDED :680 days ago
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவிலின் மாசி பிரம்மோற்சவம் ஆறாம் நாளில், உற்சவர் சந்திரசேகரர் யானை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் மாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவில் ஆறாம் நாளான இன்று உற்சவர் சந்திரசேகரர் யானை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. 23ம் தேதி திருக்கல்யாணம், 24ம் தேதி கொடி இறக்கம், 25ம் தேதி தியாகராஜ சாமி பந்தம் பரி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.