உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்பெண்ணை ஆற்றில் வீரட்டானேஸ்வரர் தீர்த்தவாரி வைபவம்

தென்பெண்ணை ஆற்றில் வீரட்டானேஸ்வரர் தீர்த்தவாரி வைபவம்

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி வைப்பவம் நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக விழாவின் நிறைவாக இன்று தீர்த்தவாரி வைபவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சிவன் உமாகவுரி சுவாமிகளான சோமஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம்வந்து விழா மண்டபத்தில் எழுந்தருளினர். மதியம் 1:30 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் திரிசூலத்தில் ரிஷபாவுடன் வேத மந்திரங்கள் முழங்க திரிசூலத்திற்கு சிறப்பு அபிஷேகம், பக்தர்களின் நமச்சிவாய கோஷத்துடன் புனித நீராடல் வைபவம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !