தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
ADDED :948 days ago
தேனி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தேனியில் பிரசித்தி பெற்ற பெத்தாட்சி விநாயகர் கோவிலில் அமைந்துள்ளது. இங்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று காலையில் விநாயகருக்கு திருமஞ்சணம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பொங்கல், கொழுக்கட்டை, சுண்டல் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.