பரமக்குடி வழிவிடும் முருகன் கோயிலில் பால்குட விழா
ADDED :630 days ago
பரமக்குடி; பரமக்குடி திருவள்ளுவர் நகர் வழிவிடும் முருகன் கோயிலில், திருச்செந்தூர் முருகன் மிதிவண்டி பயண குழு சார்பில் பால்குட விழா நடந்தது. இக்குழு சார்பில் 44 வது ஆண்டாக திருச்செந்தூருக்கு பக்தர்கள் சைக்கிளில் பயணம் செல்ல உள்ளனர். இதனை ஒட்டி இன்று காலை 7:00 மணிக்கு பால்குட விழா நடந்தது. பரமக்குடி பெருமாள் கோயில் வைகை ஆறு படித்துறையில், பால்குடங்கள், பறவை காவடி, மயில் காவடி, வேல் குத்துதல் என நிறைவடைந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். பின்னர் கோயிலை அடைந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.