/
கோயில்கள் செய்திகள் / அகஸ்தீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா; புஷ்ப அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பு
அகஸ்தீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா; புஷ்ப அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பு
ADDED :642 days ago
செங்கல்பட்டு; செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே எழுந்தருளியுள்ள ஆனந்தவல்லி உடனாகிய அகத்தீஸ்வரர் கோயில் பழமையானது. இக்கோயில் அகஸ்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் மாசி பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் விசேஷ புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி, அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.