மாசி மகா சிவராத்திரி : ராமேஸ்வரம் கோயிலில் கங்கை நீருடன் பக்தர்கள் ஊர்வலம்
ADDED :680 days ago
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் கங்கை நீருடன் ஊர்வலமாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று மாசி சிவராத்திரி யொட்டி ராமேஸ்வரம் பஜ்ரங்தாஸ் பாபா சேவா மடத்தில் இருந்து பாபா சீதாராம்தாஸ் தலைமையில் பா.ஜ., மாவட்ட பார்வையாளர் முரளிதரன், ஏராளமான பக்தர்கள் கலசத்தில் புனித கங்கை நீரை எடுத்துக் கொண்டு கோயில் சன்னதி தெரு, கோயில் 3ம் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்தனர். பின் சுவாமிக்கு புனித கங்கை நீரில் அபிஷேகம் செய்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 8ம் நாள் மாசி திருவிழா யொட்டி கோயிலில் இருந்து காலை 9 மணிக்கு கேடயத்தில் நடராஜர் சுவாமி, சிவகாம சுந்தரி அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்றனர். அப்போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.