உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான நேற்று (8.3.2024) மகா சிவராத்திரி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவில் நேற்று காலை 11 மணிக்கு இந்திர விமான வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரரும் , சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர். முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள அலங்காரம் மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளை கோயில் அலங்கார குருக்கள் பட்டு வஸ்திரங்களும் தங்க, வைர ஆபரணங்களைக் கொண்டு மிகச் சிறப்பாக பக்தர்கள்  கண்கள் கவரும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.  தொடர்ந்து நடைபெற்ற சுவாமி ஊர்வலத்தின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மகா சிவராத்திரி என்பதால் காளஹஸ்தி நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !