அயோத்தி ராமர் கோவிலில் ராம நவமி அன்று 24 மணி நேரமும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்
லக்னோ: அயோத்தியில் உள்ள ராமர் கோயில் அஷ்டமி, நவமி மற்றும் தசமியின் போது 24 மணிநேரமும் திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் நவராத்திரியின் எட்டு, ஒன்பதாம் மற்றும் பத்தாம் நாட்கள் 24 மணிநேரமும் கோவில் திறந்திருக்கும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை அயோத்திக்கு வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், ராம நவமி மற்றும் நவராத்திரிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். முன்னதாக யோகி ராமர் கோவில் மற்றும் ஹனுமங்கரியில் பிரார்த்தனை செய்தார். சாகேத் கல்லூரி ஹெலிபேடில் இறங்கிய அவர் நேரடியாக ஹனுமன்கர்ஹிக்கு சென்று ஹனுமனுக்கு ஆரத்தி செய்தார். பின்னர் ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்ட பிறகு பக்தர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் பேசினார்.
அவர் கூறியதாவது; அஷ்டமி, நவமி மற்றும் தசமியின் போது, இந்த மூன்று நாட்களில் 24 மணிநேரமும் கோவில் திறந்திருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த காலகட்டத்தில், நகரத்தில் தூய்மையை பேணுதல், குடிநீர் வழங்குதல், பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு செய்தல் முக்கியம் என்றார்.