உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கைகொண்டான் கோயிலில் புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

கங்கைகொண்டான் கோயிலில் புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருநெல்வேலி; கங்கைகொண்டான் கைலாசநாதர் கோயிலில் பாண்டிய மன்னர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது. நெல்லை அருகேயுள்ள கங்கைகொண்டான் கைலாசநாதர் கோயிலில் திருநெல்வேலி வரலாற்றுப்பண்பாட்டு களஆய்வு மைய இயக்குனர் மாரியப்பன் இசக்கி, வரலாற்று ஆசிரியர்கள் செல்வகுமார் (சேலம்) ராதா (சென்னை) மற்றும் குழுவினர் கல்வெட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாண்டிய மன்னர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கல்வெட்டு பாண்டிய மன்னர் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளது.  கல்வெட்டு தூண் அமைப்பில் சாசனம் போன்று உருவாக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் இடம் பெற்றவாசகங்கள் குறித்து ஆய்வு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !